16.02.2017 வவுனியா பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் முகாமைத்துவ தொகுதி கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அமைச்சர் இந்தக்கோரிக்கை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் முன்வைத்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனொப்ஸ் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் மாவட்ட அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் வவுனியா வைத்தியசாலையில் கழிவுகளை சுகாதார முறைப்படி அகற்றும் பொறிமுறை தொகுதிக்கான கட்டுமானங்கள் 2014ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 6 மில்லியன் யூரோ செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கழிவு முகாமைத்தவ தொகுதி உத்தியோகபூர்வமாக வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கு.அகிலேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்திலிங்கம், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் , ஐக்கியநாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி, யுனொப்ஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் றோகணபுஸ்பகுமார, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ம.கிருபாசுதன், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் மு.மகேந்திரன் மற்றும் வைத்தியர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் கலந்து இந்த நிகழ்வில் கொண்டனர்

16649118_1348868481841233_2079007640725312901_n 16681557_1348867835174631_7694020237091701347_n 16730566_1348868101841271_5929009760017582516_n 16807499_1348867698507978_3201927203150966761_n 16830621_1348867485174666_1682974670929203457_n 16832220_1348868318507916_3766027289975487674_n